2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறந்த நாள் கொண்டாட்டம் போன்ற பார்ட்டிகளில் ஹீலியம் பலூன்களைக் கட்டி வைக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மகளின் பிறந்தநாளை வீட்டில் கொண்டாடியுள்ளார்.  இதையொட்டி, அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர்கள் ஏராளமானோர் அங்கு வருகை தந்துள்ளனர் .

அப்போது, வீட்டின் மொட்டை மாடி மேல் பறக்கவிடப்பட்டிருந்த ஹீலியம் பலூன், திடீரென உயர்மின் அழுத்த கம்பியில் உரசி வெடித்து சிதறியது. அப்போது, தீப்பொறி விழுந்து ஆதித்யா குமார், அவரது மகள் மட்டுமின்றி, பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்திருந்த 3 சிறுவர்களுக்கும் கை மற்றும் முகத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

​இதனையடுத்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X