Editorial / 2020 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்றில் தனித்த நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட்-19 தொற்று உயர்ச்சியை இந்தியா இன்று பதிவுசெய்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவானது கடந்த மாதம் 16ஆம் திகதி பதிவு செய்த 77,299 என்ற எண்ணிக்கையை இந்தியாவின் 78,761 என்ற எண்ணிக்கை விஞ்சியுள்ளது.
அந்தவகையில், இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 3,542,733ஆகக் காணப்படுவதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 948ஆல் உயர்ந்து 63,498-ஆகக் காணப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்காவில் இலங்கை நேரப்படி இன்று காலை 9.25 மணி வரையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 5,977,624ஆகக் காணப்படுவதுடன், 182,772 பேர் கொவிட்-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.
பிரேஸிலானது கடந்த 24 மணித்தியாலங்களில் 758 கொவிட்-19 உயிரிழப்புகளையும், 41,350 புதிய கொவிட்-19 தொற்றுக்களையும் பதிவுசெய்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரமைச்சு நேற்றுத் தெரிவித்துள்ள நிலையில் அங்கு கொவிட்-19-ஆல் 120,262 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், 3,846,153 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அந்தவகையில், உலகளாவிய ரீதியில் 25 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 841,000க்கும் அதிகமானோர் கொவிட்-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.
46 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago