2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி 5 பேர் கைது

Freelancer   / 2023 ஜூலை 19 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி செய்ததாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.  அவர்கள்வசம் இருந்த அலைபேசிகள்  வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதான அந்த ஐந்து பேரும் கொடுத்த தகவலின்படி மேலும் ஐந்து பேர் தேடப்பட்டு வருவதாக மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 கைதான ஐந்து பேரும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைதாகி பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். சிறையில் சில தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட தொடர்பால் அவர்கள் வெடிப்பொருட்களை கையாள்வதில் பயிற்சி பெற்றுள்ளனர் என்பதும் தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X