2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பெண் குழந்தை பிறந்தால் ரூ.1 லட்சம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 18 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் குழந்தைகளின் நலனுக்காக ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த சூழலில் தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு பெண் குழந்தைகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி மாநிலத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ரேஷன் அட்டைகளை வைத்துள்ள குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பிறந்தால் முதலில் ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். அதன் பிறகு ஒன்றாம் வகுப்பில் சேரும்போது 6 ஆயிரம் ரூபாய், ஆறாம் வகுப்புக்கு செல்லும்போது 7000 ரூபாய், ஒன்பதாம் வகுப்பில் எட்டாயிரம் ரூபாய், இறுதியாக குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி பெண் குழந்தைகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படுகின்றது. இதனை பெண் குழந்தையின் எதிர்கால கல்வி மற்றும் திருமணம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X