Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 28 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கன்னியாகமரி மாவட்டம் மேக்கா மண்டபம் அருகே தந்தையால் கடத்தப்பட்ட 3 வயது சிறுவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேக்கா மண்டபத்தை அடுத்த பிலாங்காலை பகுதியைச் சேர்ந்த பிபின் - பிரியா தம்பதியின் 3 வயது மகன் ஆத்விக். கடமலைக்குன்று பகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் படித்து வருகிறார். இந்நிலையில் காரில் பாடசாலைக்குச் சென்ற சிறுவனை, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்த 20 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சிறுவனின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதில்,
அதில் சிறுவனின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருவதும், இந்த நிலையில் சிறுவனின் தந்தையே அவரை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, நாகர்கோவில் அருகே பிபினின் நண்பர் வீட்டிலிருந்த சிறுவன் ஆத்விக்கை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
9 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago