A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 10 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை முதற்கட்டமாக 5 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு போடுவதற்கு திட்டம் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டொக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
முதலமைச்சரின் உத்தரவின் பேரில், மத்திய அரசு, கொரோனா தடுப்பூசியை தமிழகத்துக்கு அனுப்புவதற்கு முன்பாக, முதற்கட்டமாக யார்,யாருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற கணக்கெடுக்கும் பணியை தொடங்கி உள்ளோம்.
அந்தவகையில், கொரோனா முன்கள பணியாளர் களான அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டொக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்ட 5 இலட்சம் பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம்.
இதையடுத்து 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் பின்னர் 50 வயதுக்கு குறைவான இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படும். இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இந்த தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம் என்றார்.
26 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
1 hours ago