2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாடுகளோடு மல்லுக்கட்டிய அமைச்சர்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 11 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தருமபுரி மாவட்டம் ,பென்னாகரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொங்கள் விழாக் கொண்டாட்டமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இக்கொண்டாட்டத்தின் போது அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்கு பா.ம.கவின் கௌரவ தலைவரான ஜிகே. மணி வாழைப்பழங்களை வழங்கினார்.

ஆனால் அந்த மாடு வாயை திறக்க மறுத்தது. இதனால் அருகில் நின்ற தொண்டர், அந்த மாட்டின் வாயை திறக்க வைத்து, பழத்தை வாயில் திணிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த மாடு தான் இப்படி என்றால், வேறு ஒரு மாட்டிற்கு வாழைப் பழத்தை உரித்து வழங்கினார் ஜி.கே. மணி.   அதுவும் வாய் திறக்க மறுத்தது.  எனினும் மனம் தளராத ஜி.கே மணியோ , அருகில் நின்ற மற்றொரு மாட்டிற்கு வாழைப்பழைத்தை ஊட்டிவிட முயன்றார்.

எனினும் அந்த மாடும் வாயைத் திறக்கவில்லை. இந்நிலையில்  இது குறித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .