2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மானியம் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

Freelancer   / 2023 நவம்பர் 05 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளின் பசியை போக்குவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா என்ற திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு 5 கிலோ கிராம் உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்துடன் கூடுதலாக இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் இதை மேலும் நீட்டிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

சத்தீஸ்கரின் துர்க் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது

“80 கோடி ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச மானியம் டிசெம்பர் மாதத்துடன் நிறைவடைய இருக்கும் நிலையில், அது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இது வெறும் ஒரு தேர்தல் அறிவிப்பு அல்ல, இது மோடியின் உத்தரவாதம்.

தங்கள் குடும்பத்துக்காக வீட்டை விட்டு தொலைதூரத்தில் சென்று உழைக்கும் மக்களும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வழியாக இந்த இலவச மானியத்தை பெற முடியும்.” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X