A.K.M. Ramzy / 2020 நவம்பர் 16 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாட்னா:
பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பேரவைக் குழுத் தலைவராக நிதீஷ் குமார், முதல்வராக இன்று பதவியேற்கவுள்ளார். அவர் பிஹார் முதல்வராக தொடர்ந்து பதவியேற்பது இது நான்காவது முறையாகும்.
இதற்கிடையே, பிஹாரில் இரண்டு துணை முதல்வர்கள் பதவிகளை ஏற்படுத்த பாஜக முடிவு செய்திருப்பதாகவும், பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் தார்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளையில், பிஹார் சட்டப்பேரவையின் அவைத் தலைவர் பதவியையும் பாஜக கைப்பற்றவிருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய தார்கிஷோர் பிரசாத், இரண்டு துணை முதல்வர்கள் பதவியேற்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, பாஜக பேரவைக் குழு தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து கட்சியின் பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில்தான் தெரிந்து கொண்டேன்.
கட்சித் தலைமை எனக்கு அளித்தப் பொறுப்புகளை நேர்மையுடன் பணியாற்றுவேன் என்று பதிலளித்தார்.
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago