Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்னோ:
'முத்தலாக்' வாயிலாக மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு,ஆறாவது திருமணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மீது, உத்தர பிரதேச பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. இங்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது, அமைச்சராக பதவி வகித்தவர் சௌத்ரி பஷீர். பின், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் அந்த கட்சியில் இருந்தும் விலகினார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சௌத்ரி பஷீரின் மூன்றாவது மனைவி நக்மா, சமூக வலைதளத்தில் 'வீடியோ' ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: சௌத்ரி பஷீருக்கு என்னையும் சேர்த்து ஏற்கனவே ஐந்து மனைவியர் உள்ளோம். இந்நிலையில் அவர், ஆறாவது திருமணம் செய்யப் போவதாக சமீபத்தில் கேள்விப்பட்டேன். இது குறித்து அவரிடம் கேட்டபோது, என்னை அடித்து துன்புறுத்தினார். முத்தலாக் வாயிலாக என்னை விவாகரத்து செய்து வீட்டை விட்டு துரத்தினார். கடந்த 2012ஆம் ஆண்டு பஷீரை திருமணம் செய்தேன். அப்போது இருந்தே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை துன்புறுத்தி வந்தார். பெண்களை துன்புறுத்துவதில் அலாதியான விருப்பம் உடையவர். இவ்வாறு அவர் கூறினார்.
10 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago