Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மைசூரு தசரா விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 15-ந்திகதி முதல் வருகிற 25-ந்திகதி வரை தசரா மலர் கண்காட்சி நடக்கிறது.
இந்நிலையில் ஞாயிற்றுகிழமை (15) தசரா மலர் கண்காட்சி மைசூரு நஜர்பாத் குப்பண்ணா பூங்காவில் தொடங்கியது. இந்த கண்காட்சியை மாவட்ட பொறுப்பு மந்திரி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
நஜர்பாத் குப்பண்ணா பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு வடிவமைப்புகளில் மலர் கண்காட்சி ஏற்படுத்தி உள்ளது. இங்கு, 60 ஆயிரத்திற்கும் அதிகமான பூந்தொட்டிகளில் வைத்து வண்ண வண்ண செடிகள் வளர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் 24 அடி உயரத்திற்கு சந்திரயான்-3 விண்கலம் மற்றும் லேண்டர், ரோவர் 6 லட்சம் வெள்ளை, சிகப்பு ரோஜா பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago