A.K.M. Ramzy / 2020 நவம்பர் 11 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த மோசடி மன்னன் காசியிடம் இருந்து தற்போது 1000 ஆபாச வீடியோக்கள் சி.பி.சி.ஐ.டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.6 பெண்கள் இவர் மீது புகார் அளித்துள்ளனர்.
இணையத்தில் பல ஆண்கள் தங்களது பொழுது போக்கிற்காக பெண்களை பயன்படுத்துவது சமீப காலமாக அதிகரித்து வந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் பல பெண்களை இணையம் வழியாக காதலில் விழ வைத்தமை குறித்து மோசடி மன்னன் காசி என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பலர் இவருக்கு உதவி செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இப்படியாக இவர் மீது 6 பெண்கள் புகார் அளித்தததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலிஸாருக்கு மாற்றப்பட்டது.
1000 வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.அதில் பல தடயங்கள் அழிக்கப்பட்டதால் காசியின் தந்தையும் கைது செய்யப்பட்டார். தற்போது காசி பெண்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான வீடியோக்களை சி.பி.சி.ஐ.டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago