2025 ஜூலை 17, வியாழக்கிழமை

“மோடியுடன் இணைந்து மேடை ஏற மாட்டேன்”

Freelancer   / 2023 ஒக்டோபர் 25 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. இந்த சூழலில் வரும் 30ம் திகதி மிசோரம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் பிரதமர் மோடி, தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா, “மிசோரம் மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். மணிப்பூரில் தேவாலயங்களை எரித்தபோது எங்கள் மக்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தனர். இத்தகைய சூழலில் பாஜவுடன் பரிவு காட்டுவது எங்கள் கட்சிக்கு பின்னடைவாக அமையலாம். அதனால் பிரதமர் மோடி தனியாக பரப்புரை மேற்கொள்வதும், நான் தனியாக பரப்புரை மேற்கொள்வதும் தான் சரியாக இருக்கும். காங்கிரசுக்கு எதிரானது எங்கள் கட்சி. அதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம். ஆனால் மிசோரம் மாநிலத்தில் அவர்கள் தலைமையில் இணைந்து செயல்பட விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X