A.K.M. Ramzy / 2020 நவம்பர் 05 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
அரசியல் நிலைப்பாடு குறித்து தகுந்த நேரத்தில் அறிவிப்பேன் என்று கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்துடன் ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் திகதி அறிவிக்க இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில் ரஜினி கட்சி தொடங்க வேண்டும் என்று அவருக்கு, ரசிகர்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அக்டோபர் 29ஆம் திகதி ரஜினி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘என் அறிக்கைபோல
ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்தி ருக்கும் என் உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் அளித்த
அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பேன்’ என்று கூறியிருந்தார்.
இது ரஜினி ரசிகர்கள், ஆதர வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்ற கருத்துகளும் பரவி வருகின்றன.
இந்நிலையில், ‘துக்ளக்’ வார இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை
சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, ரஜினியின் பெய ரில் வெளியான கடிதம் குறித்தும் அதற்கு ரஜினி அளித்த பதில் குறித்தும் விவாதிக்கப் பட்டுள்ளது.
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
1 hours ago