Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு சிக்கிம் லாசசென் பள்ளத்தாக்கு பகுதியில் புதன்கிழமை (04) அதிகாலை திடீரென்று மேகவெடிப்பு ஏற்பட்டு பலத்த மழை பெய்தது.
தொடர்ந்து இடைவிடாமல் கொட்டிய மழையால் அப்பகுதியில் வெள்ளம் ஓடியது. அதனால் அங்குள்ள தீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலத்த மழையால் சுங் தாங் அணைக்கு திடீரென்று நீர்வரத்து அதிகமானதால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நேரம் செல்ல செல்ல ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் சிங்டாம் அருகே பர்டாங்க் பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்குள் திடீரென்று வெள்ளம் புகுந்து ராணுவ முகாமில் இருந்த வீரர்களும் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.
அதிகாலையில் ராணுவ வீரர்கள் தூங்கி கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று வெள்ளம் புகுந்ததால் சுதாரித்து கொள்வதற்குள் பலர் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். சிலர் ராணுவ வாகனங்களுடன் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர். அதில்23 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளதை ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளின்போது சிங்டாமில் இருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி தெரிவித்தார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago