Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 20 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீல்ஸ் வீடியோ எடுத்த 3 இளைஞர்கள், ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.
இவர்கள்,கர்நாடக மாநிலம், பெங்களூரு புறநகர் மாவட்டம், தொட்டபள்ளாப்புராவில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்கள் எனவும், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மூவரும், 18, 20, 24 வயதுடையவர்கள் ஆவர்.
புதன்கிழமை (19) மாலை, வேலை முடிந்ததும் நிறுவனத்தில் இருந்து 3 பேரும் வீட்டிற்கு புறப்பட்டனர். தொட்டபள்ளாப்புரா, சித்தேநாயக்கனஹள்ளி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் பகுதிக்கு வந்த 3 பேரும், அங்கு ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று 3 பேர் மீதும் மோதியது.
இதில் மூவரு் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
35 minute ago
9 hours ago