2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

விசிலால் இயங்கும் கிராமம்

Ilango Bharathy   / 2023 மார்ச் 01 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கிலிருந்து சுமார் 60 கிலோமீற்றர்  தொலைவில்  ‘காங்தாங்‘ என்கிற கிராமம் அமைந்துள்ளது.

இக்கிராமமானது   “விசிலிங் வில்லேஜ்” என்ற பெயரால் பரவலாக அழைக்கப்படுகின்றது.

700 பேரைக்  கொண்ட இக்கிராமத்தில் 700 வகையான இசை எப்போதும் இசைத்துக்கொண்டே இருக்கும் எனக் கூறப்படுகின்றது.

ஏனெனில் இக்கிராமத்தில் உள்ளவர்கள் விசில் மூலமே ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்கின்றனர் எனவும்,  ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட  விசில் இசை ஒன்று பெயராகச்  சூட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசி பழங்குடி மக்களான இவர்களுக்கு, இரண்டு பெயர்கள் உள்ளன என்றும் அதில் ஒன்று வழக்கமாக  வைக்கப்படும் பெயர் எனவும் மற்றொன்று இசைப் பெயர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இசையை இவர்கள் ’ஜிங்கர்வை லாபெய்’ என்று அழைப்பதாகவும், குழந்தை பிறந்தவுடன் தாய்மார்கள்  தங்கள் குழந்தைகளுக்காக இந்த இசையை அமைப்பார் எனவும், கிராமத்தினர் யாராவது இறந்துவிட்டால், அந்த இசையும் அவர்களுடன் சேர்த்து மரணித்திவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் இவர்கள் ஒருவரோடு ஒருவர்  இசையின் வாயிலாகவே பேசிக்கெள்கின்றனர் எனவும், இதை பற்றி அறிந்த அக்கம்பக்கத்து கிராமவாசிகளும் இவ்  வழக்கத்தை பின்பற்ற தொடங்கியுள்ளனர் எனவும்   அக் கிராமமக்கள் தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .