A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 6ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையை நடாத்தவுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை, வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
விவசாய சங்கங்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று 9ஆம் திகதி குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளன.
விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடும் எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
நேற்றுமாலை விவசாயிகள் அமைப்பினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர்.
அப்போது விவசாயிகள் போராட்டத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படையாமல் இருக்கவும், போக்குவரத்து பாதிப்பை நீக்கவும் ஒத்துழைக்கு மாறு விவசாய சங்க பிரதிநிதிகளிடம் அமித் ஷா வலியுறுத்தினார்.
26 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
1 hours ago