2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வெள்ளத்தால் வீணான ரூ.400 கோடி

Freelancer   / 2023 நவம்பர் 02 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நாக்பூர் நகரமே வெள்ளம்  ஏற்பட்டது. இதனால் வீடுகள், அலுவலகங்களில் மழை நீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி இந்த வெள்ளப்பெருக்கால் சேதமடைந்தது. மேலும், வங்கியின் பாதுகாப்புப் பெட்டகம்  மற்றும் கையிருப்பு மையங்களில்  வைக்கப்பட்டிருந்த ரூ.400 கோடி தண்ணீரில் மூழ்கி வீணானது.

இந்த தகவலறிந்து சம்ப இடத்திற்கு வந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து கணக்கில் எடுத்துக்கொண்டனர். பின்னர் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளுக்கு மாற்று ரூபாய் நோட்டுகளை வழங்கினர்.

மேலும், வெள்ளத்தால் ரூபாய் நோட்டுகள் சேதமானால் அந்த பணத்துக்கான இழப்பை வங்கி நிர்வாகம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X