2025 ஜூலை 17, வியாழக்கிழமை

“வைக்கோலை எரிக்காதீர்கள்”

Freelancer   / 2023 நவம்பர் 08 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லியின் காற்று மாசு 400 முதல் 470 புள்ளிகளாக இருந்து வருகிறது. தலைநகரில் காற்று மாசு 399 ஏ.கியூ.ஐ. ஆக செவ்வாய்க்கிழமை (07) இருந்தது. இந்த காற்றை சுவாசிக்கும் நபர் 30 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் ஆகும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே புதுடெல்லி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தக் கோரி மூத்த வழக்கறிஞர் அப்ரஜிதா சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது அவர் கூறும்போது, “புது டெல்லியில் காற்று மாசு அபாயகர அளவை எட்டியுள்ளது. பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வைக்கோல்களை எரிப்பதால் தலைநகரில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அந்த மாநிலங்களில் வைக்கோல்களை எரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

பஞ்சாப் அரசு தலைமை வழக்கறிஞர் கூறும்போது, “ஏழை விவசாயிகள் வைக் கோல்களை எரித்து வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுக்கு மானிய உதவிகளை வழங்கி மாற்று வழியில் வைக்கோல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் “காற்று மாசு காரணமாக புதுடெல்லி மக்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்சினை எழுகிறது. இதை தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும்.

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் வைக்கோல்கள் எரிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” என தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X