Editorial / 2020 ஏப்ரல் 10 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாட் இராணுவத்தின் மீதான கடந்த மாத 23ஆம் திகதி தாக்குதலில் 92 படைவீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 10 நாள்கள் நடவடிக்கையொன்றில் 1,000 போகோ ஹராம் ஆயுததஅரிகளைக் கொன்றதாகவும், தமது 52 படைவீரர்களை இழந்ததாகவும் சாட் இராணுவம் நேற்றுத் தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கையை கடந்த மாதம் 31ஆம் திகதி சாட் இராணுவம் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், போகோ ஹராம் தீவுத் தளங்கள் இரண்டை தமது படையினர் ஆக்கிர்ரமித்துள்ளதாகவும், நைஜர் மற்றும் நைஜீரியாவின் சாட் நதிக் கரையோரங்களிலும் தமது படைகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் சாட் இராணுவத்தின் பேச்சாளர் அஸெம் பெர்மடூவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நடவடிக்கை முடிவடைந்ததாகவும், 196 சாட் படைவீரர்கள் காயமடைந்ததாக மேலும் அஸெம் பெர்மடூவா குறிப்பிட்டுள்ளார்.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025