2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

1.5 லட்சம் பாகிஸ்தானியர் உயிர் தப்பினர்

Editorial   / 2025 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்​தி​யா​வின் முன்​கூட்​டியே அளித்த வெள்ள எச்​சரிக்​கை​யால் 1.5 லட்​சம் பாகிஸ்​தானியர்​கள் உயிர் தப்பி உள்​ளனர்.

காஷ்மீரிலிருந்து பாகிஸ்​தானை நோக்கி பாயும் ராவி, சட்​லெஜ், செனாப் ஆகிய ஆறுகளில் கடும் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. மேலும் ஜம்மு காஷ்மீரில் உள்ள அணை​கள் முழு கொள்​ளளவை எட்​டிய​தால் திறக்​கப்​பட்​டுள்​ளன. இதனால் கடும் வெள்​ளப்​பெருக்கு ஏற்​படும் என கடந்த திங்​கள்​கிழமை, செவ்​வாய்க்​கிழமை, புதன்​கிழமை என தொடர்ந்து பாகிஸ்​தான் அரசுக்கு இந்​திய அரசு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுத்​தது.

இதன் அடிப்​படை​யில், ஆற்​றங் கரையோர கிராமங்​களைச் சேர்ந்த சுமார் 1.5 லட்​சம் பேர் அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தப்​பட்டு பாது​காப்​பான இடங்​களில் தங்க வைக்​கப்​பட்​டனர். இதனால் அவர்​கள் உயிர் தப்பி உள்​ளனர்.

காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் கடந்த ஏப்​ரல் மாதம் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தி​ய​தில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில், இந்​திய அரசு மனி​தாபி​மான அடிப்​படை​யில் வெள்ள அபாய எச்​சரிக்கை விடுத்​த​தால் 1.5 லட்​சம் பாகிஸ்​தானியர்​கள் உயிர் தப்பி உள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இந்​தி​யா​வின் பஞ்​சாப் மாநிலத்​தி​லும் கடந்த சில நாட்​களாக கனமழை பெய்து வரு​வ​தால் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. பசில்கா மாவட்​டம் தேஜா ரோஹேலா கிராமத்​தைச் சேர்ந்த 16 வயது சிறு​வன் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டான். அவனைக் காப்​பாற்ற முயன்ற மேலும் 3 பேர் வெள்​ளத்​தில் சிக்​கிக் கொண்​டனர். இதனிடையே, அவர்​கள் வழி​யில் இருந்த யூகளிப்​டஸ் மரங்​களில் ஏறிக் கொண்​டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்​குச் சென்ற தேசிய பேரிடர் மீட்​புக் குழு​வினர் 4 பேரை​யும் பத்​திர​மாக மீட்​டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .