2025 மே 14, புதன்கிழமை

100 பேருடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது

Editorial   / 2019 டிசெம்பர் 27 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஜகஸ்தான் நாட்டின் அலமட்டி நகரில் இருந்து, நூர்சுல்தான் நகருக்கு பெக் ஏர் பயணிகள் விமானம் இன்று (27) காலை புறப்பட்டது. அதில் 95 பயணிகள், 5 ஊழியர்கள் என மொத்தம் 100 பேர் பயணித்தனர். 

இந்த விமானம் புறப்பட்ட ஓரிரு நிமிடங்களில் அருகில் உள்ள கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வீடுகள் இடிந்து விழுந்தன. விமானத்தின் ஒரு பகுதி நொறுங்கியது. 

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட போது, போதிய உயரத்துக்கு எழும்பாததால், கொங்கிரீட் வேலியில் மோதி பின்னர் அதனை ஒட்டியுள்ள 2 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .