Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 100 ஆண்டுகளில் வத்திக்கானுக்கு வெளியில் நல்லடக்கம் செய்யப்படும் முதல் போப் கத்தோலிக்க திருசபையின் தலைவர் போப் பிரான்சிஸ் ஆவார்.
போப் ஆண்டவர்கள் மறைவுக்குப் பிறகு நல்லடக்க சடங்குகள் மிக விரிவாக நடப்பது வழக்கம்.
ஆனால் முந்தைய போப்களின் பிரம்மாண்ட இறுதிச் சடங்குகளைப் போல் அல்லாமல் தனது இறுதிச் சடங்கு மிகவும் எளிமையான முறையில் நடைபெற வேண்டும் என்று போப் பிரான்சிஸ் விரும்பினார்.
மற்ற போப்ஸ் அடக்கம் செய்யப்பட்ட புனித பீட்டர்ஸ் பசிலிக்காவின் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதை விட வாடிகன் நகரத்திற்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காவில் தன்னை அடக்கம் செய்ய போப் பிரான்சிஸ் விரும்பினார்.
அங்குள்ள கன்னி மரியாளின் உருவத்தின் மீது அவர் கொண்டிருந்த பக்தி காரணமாக இந்த முடிவை அவர் எடுத்தார். பிரான்சிஸ் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பும்போது கன்னி மரியாள் முன்பு பிரார்த்தனை செய்வார். அதே இடத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago