2025 மே 15, வியாழக்கிழமை

12 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர்

Freelancer   / 2023 ஜூலை 13 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாவுக்கு பிறகு உலகம் முழுவதும் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 12 கோடி அதிகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை புதன்கிழமை (12) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு 61 கோடியாக இருந்த நிலையில், தற்போது 73 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆசியா, லத்தின் அமெரிக்க நாடுகளில் உணவு இல்லாமல் தவிப்போரின் எண்ணிக்கை குறைந்தாலும், மேற்கு ஆசியா, கரீபியன் மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், அதாவது 240 கோடி பேர் நாள்தோறும் உணவின்றி தவிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .