Editorial / 2019 ஜூன் 05 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசாமிலிருந்து 13 பேருடன் மாயமான விமானத்தை, இஸ்ரோ செயற்கைகோள்கள் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அசாம் மாநிலம், ஜோர்காட்டிலிருந்து, அருணாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள மேற்கு சியாங் மாவட்டத்துக்கு, இந்திய விமானப் படையின், ஏ.என் - 32 ரக விமானம், நேற்று முன்தினம் (03) புறப்பட்டது.
இந்த விமானம், இந்திய விமானப் படையில், போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. விமானத்தில், 13 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட அரை மணி நேரம் வரை, கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்தது. அதற்கு பின், விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்த தகவல், விமானப் படை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சுகோய் - 30 ரக போர் விமானம் உள்ளிட்ட, இந்திய விமானப் படை விமானங்கள் மூலம், தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இந்நிலையில், மாயமான விமானத்தை மீட்கும் பணியில் இஸ்ரோவும் உதவி வருகிறது. விமானத்தை கண்டுபிடிக்க, இஸ்ரோ செயற்கைகோள்கள் மூலம் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் தீவிரமாக தேடும் பணி நடக்கிறது. மேலும், சூ-30 எம்கேஐ, சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் உள்ளிட்ட விமானங்களும், மாயமான விமானத்தை தீவிரமாக தேடி வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .