2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

15 மனைவிகள், 107 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழும் காதல் மன்னன்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 13 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கென்யாவைச் சேர்ந்த ஒரு நபர் 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் சாகாயோ கலுஹானா.

61 வயதான இவர் இதுவரை 15 பெண்களைத்  திருமணம் செய்துள்ளார் எனவும் அவர்கள் மூலம் அவருக்கு  மொத்தமாக  107 பிள்ளைகள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில்  ஆச்சரியமான விடயம் என்னவென்றால், அவர் அனைத்து மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில்   வசித்து வருவதுதான்.

இந்நிலையில் இது குறித்த ஆவணப்படமொன்று யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X