2024 மே 15, புதன்கிழமை

155 முறை நிலநடுக்கம் 48 பேர் பலி

Mithuna   / 2024 ஜனவரி 02 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் திங்கட்கிழமை (01) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 பதிவானதால் கட்டடங்கள் குலுங்கின. சாலைகள் பிளந்து கடும் சேதம் அடைந்தன. மிகப்பெரிய நிலநடுக்கம் என்பதால் உயர்மட்ட சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.

இருந்த போதிலும் புத்தாண்டு தினத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (02) வரை அதிர்ந்து கொண்டே இருந்ததாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 155 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலன நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 3-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் காரணமாக 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் பயங்கர நிலநடுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதால் கடற்கரையோர பகுதிகளில் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கம் குறித்து செல்போனில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் மக்கள் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர்.

இருந்த போதிலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .