2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

2,000 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

Freelancer   / 2021 ஒக்டோபர் 02 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் அமெரிக்க நாடான ஈகுவடோர் நாட்டின் சிறையில் உள்ள 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஈகுவடோர் அரசு தீர்மானித்துள்ளது. 

சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

குயாஸ் மாகாணத்தின் துறைமுக நகரமான குயாகுவிலுள்ள சிறைச்சாலையில் கடந்த செவ்வாய்கிழமை இருதரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்ததில் 118 கைதிகள் உயிரிழந்துடன், மேலும் 79 கைதிகள் படுகாயமடைந்தனர்.

ஈகுவடோரில் உள்ள சிறைச்சாலைகளில் சுமார் 39 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 

அதிக எண்ணிக்கையிலான கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டதாலும், கைதிகளை கண்காணிக்க போதிய அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடாததும் இதுபோன்ற மோதல்கள் வன்முறையில் முடிய காரணமாகியுள்ளது.

இதன்காரணமாக,  சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் பெண்கள், வயதானோர், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டோரில் 2 ஆயிரம் பேரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. 

சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் பாதுகாப்பை அதிகரித்து, மோதல்களை தவிர்க்கலாம் என்ற நோக்கத்தோடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .