2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

2 1/2 வருடங்களாக வீட்டில் இருந்த பெண்ணின் சடலம் மீட்பு

Ilango Bharathy   / 2022 ஜூலை 25 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவரின் சடலம்,  2 1/2 வருடங்களுக்குப் பின்னர் அவரது வீட்டின்  கதிரையில் இருந்து எடுக்கப்பட்ட சம்பவம்  பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 60 வயதான ஷெய்லா செலியோனே (Sheila Seleoane) என்ற பெண்ணின் சடலமே இவ்வாறு அண்மையில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 

இரண்டரை ஆண்டுகள் ஷெய்லா வாடகை செலுத்தாமல் இருந்துள்ள நிலையில் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்திய நிலையிலேயே அவர் மரணித்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ஷெய்லாவின் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, அவரது உடல் சிதைந்த நிலையில் இருந்ததால், அவரது மரணத்துக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை எனவும், அதே வேளையில், கொலை நடந்ததற்கான காரணங்கள் மற்றும் தடயங்கள் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தனியாக வசித்து வரும் ஷெய்லா, கடந்த 2019 ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதத்திலேயே இறந்திருக்கலாம் எனவும்  கூறப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X