2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

2,500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய பைடன்

Freelancer   / 2025 ஜனவரி 19 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க வரலாற்றில், அதிக பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி என்ற பெருமையை ஜோ பைடன் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில், கடந்த மாதம், தேர்தல் நடந்து முடிந்தது. இதில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவியேற்பு விழா, திங்கட்கிழமை (20) நடைபெறவுள்ளது. அப்போது ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக்காலமும் நிறைவு பெறுகிறது.

இந்தநிலையில், தான் பதவி விலகும் முன்னர், அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். அதன்படி வன்முறையற்ற போதைப்பொருள் குற்றவாளிகள் 2,500 பேருக்கு அவர் பொதுமன்னிப்பு மற்றும் தண்டனை குறைப்புகளை வழங்கி உத்தரவிட்டார். 

இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில், அதிக பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி என்ற பெருமையை இவர் பெற்றிருப்பதாக, வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X