2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

2 மணி நேரப் பயணம் 2 நிமிடத்தில் நிறைவு செய்யும் பாலம்

Editorial   / 2025 செப்டெம்பர் 30 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உல​கின் மிக உயர​மான பாலம் சீன நாட்​டில் திறக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இது​வரை 2 மணி நேர​மாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்​களாக குறைந்​துள்​ளது.

சீனா​வின் குய்சோ மாகாணத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள பாலம் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக திறக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தப் பாலத்​துக்கு ஹுவாஜி​யாங் கிராண்ட் கன்​யான் பாலம் என்று பெயர் வைக்​கப்​பட்​டுள்​ளது. தரை மட்​டத்​திலிருந்து 625 மீட்​டர் உயரத்​தில் இந்​தப் பாலம் அமைந்​துள்​ளது.

இரு மலைகளை இணைக்​கும் வித​மாக இந்​தப் பாலம் மிக​வும் அழகுட​னும், சிறப்​பாக​வும் அமைந்​துள்​ளது. இது​வரை இப்​பகு​தி​யைக் கடக்க 2 மணி நேரம் எடுத்​துக்​கொண்ட நிலை​யில் தற்​போது பாலத்​தின் உதவி​யால் இரண்டே நிமிடத்​தில் இப்​பகு​தி​யைக் கடந்து விட முடி​யும்.

இதற்கு முன்பு பெய்​பான்​ஜி​யாங் பகு​தி​யில் தரைமட்​டத்​திலிருந்து 565 மீட்​டர் உயரத்​தில் கட்​டப்​பட்டு இருந்த பாலமே உலகின் மிக உயர​மான பால​மாக இருந்​தது.

தற்​போது இந்த ஹுவாஜி​யாங் கிராண்ட் கன்​யான் பாலம் 625 மீட்​டர் உயரத்​தில் அமைக்​கப்​பட்டு அந்த சாதனை முறியடிக்​கப்​பட்​டுள்​ளது. 2,900 மீட்​டர் நீளம் கொண்​ட​ இந்​தப் பாலம் 3 ஆண்​டு​களில் கட்டி முடிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து குய்சோ மாகாண போக்​கு​வரத்து முதலீட்டு குழு​மத்​தின் திட்ட மேலா​ளர் வூ ஜாவோமிங் கூறும்​போது, “625 மீட்​டர் உயரத்​தில் அமைந்​துள்ள இந்​தப் பாலம் பொறி​யியலின் அற்​புத​மாக திகழ்​கிறது.

இந்​தப் பாலத்தை பொது​மக்​கள் கண்​டு​களிக்க வசதி​யாக 207 மீட்​டர் உயரத்​தில் லிப்ட் அமைக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் பாலத்​தையொட்டி உணவகங்​கள், பாலத்தை பொது​மக்​கள் கண்​டு​களிக்க பிளாட்​பாரங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இது மிக விரை​வில்​ பிரபல​மான சுற்​றுலாத்​ தல​மாக ​மாறி சுற்​றுலாப்​ பயணி​களை வெகு​வாக ஈர்​க்​கும்​’’ என்​றார்​.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X