Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 30 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
20 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தூக்குத் தண்டனையை சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியுள்ளது.
சமூக நலப் பாதுகாப்பு, ஒழுக்கம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தண்டனைகளை வழங்கி வருகிறது சிங்கப்பூர். இதனால் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்புகளின் கடும் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது
இந் நிலையில், 2018-ல் சரிதேவி டிஜமானி என்ற பெண் 30 கிராம் ஹெராய்னை கடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அவருக்கு தூக்குத் தண்டனையை சிங்கப்பூர் அரசு உறுதி செய்தது. இந்த நிலையில், இன்று அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த வார தொடக்கத்தில் 50 கிராம் ஹெராய்ன் கடத்தியதற்காக அசிஸ் என்ற இளைஞருக்கு சிங்கப்பூர் அரசு தூக்குத் தண்டனை நிறைவேற்றியது. இந்த நிலையில், இவ்வாரத்தில் இரண்டாவது நபராக சரிதேவி டிஜமானிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கிராம் கஞ்சா கடத்தப்படுவதற்கு உதவியதாக தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜு சுப்பையா (46) கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்கராஜு குற்றவாளி என கடந்த 2017-ம் ஆண்டு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி மரண தண்டனையை உறுதி செய்தது. இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகள் நடந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago