Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 24 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் திகதி பொது தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தனது சொந்த ஊரான மியான்வாலி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக ஊழல் வழக்கு மற்றும் அரசு ரகசியங்களை கசியவிட்டது உட்பட இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானதை அடுத்து இம்ரான் கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி இம்ரான் கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. அதன் படி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இம்ரான் கான், தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
1 hours ago
3 hours ago