2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

2032இல் பூமிக்கு பேராபத்து; விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Freelancer   / 2025 ஜனவரி 29 , பி.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

2032 ஆம் ஆண்டில் 024 YR4 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

அஸ்டிராயிட் டெரெஸ்டிரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் (ATLAS) விஞ்ஞானிகள், பூமியிலிருந்து சுமார் 8,29,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து சிறுகோள் பூமியை நோக்கி வருவதாக 2024ஆம் ஆண்டு கண்டறிந்தனர்.

இந்த சிறுகோள் தற்போது பூமியிலிருந்து 27 மில்லியன் மைல்கள் தொலைவில் சூரியக் குடும்பத்தைச் சுற்றி நகர்ந்துகொண்டிருக்கிறது.

சுமார் 196 அடி விட்டம் கொண்ட இந்த 2024 YR4 சிறுகோள் 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்க 1.2 சதவீதம் (1-in-83) வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

2028 ஆம் ஆண்டில் இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

2024 YR4 சிறுகோள் பூமியைத் தாக்கினால், பூமியின் மீது சுமார் 8 மெகா டன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்று நாசா கணித்துள்ளது.

இது 1945ல் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு ஆற்றலை விட 500 மடங்கு அதிகமாகும்.

சிறுகோளின் பாதையை நகர்த்த விஞ்ஞானிகள் விண்வெளியில் வைத்து மோதலை ஏற்படுத்தும் திட்டத்தைப் பரிசீலித்து வருகின்றனர்.

இப்போது, 2024 YR4 சிறுகோளைக் கவனமாகக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள், 2032 இல் அதன் தாக்கம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .