2025 மே 15, வியாழக்கிழமை

24 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் விடுமுறை எடுத்த ஆசிரியை

Freelancer   / 2023 ஜூலை 03 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 365 நாட்களும் பாடசாலைகள் நடைபெறுவதில்லை. வார விடுப்பு நாட்கள், அரசு விடுமுறைகள், பண்டிகை கால விடுமுறைகள், தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை என சுழற்சி முறையில் வந்து கொண்டே இருக்கும்.  சாதாரணமாக ஓர் ஆண்டுக்கு 240 நாட்கள் தான் வேலை நாட்களாக இருக்கும். எஞ்சிய நாட்களெல்லாம் விடுமுறை நாட்கள்தான்.

மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஏறக்குறைய ஆசிரியர்களுக்கும் இந்தச் சலுகை முழுமையாக பொருந்தும்.  

பொது விடுமுறை நாட்களைக் கடந்து, தனி நபருக்கு உடல்நிலை சரியில்லை, நீண்ட மருத்துவ சிகிச்சை, வீட்டில் விசேஷம் என்று பல காரணங்களுக்காக விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.  

ஆனால், இத்தாலியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் கதையை கேட்டால் நமக்கே வியப்பாக இருக்கிறது. கடந்த 24 ஆண்டுகளில் மொத்தமாக 4 ஆண்டுகள் மட்டும்தான் பள்ளிக்கு வந்திருக்கிறாராம். எஞ்சியுள்ள 20 ஆண்டுகளை விடுப்பிலேயே கழித்திருக்கிறார். உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு, கருத்தரங்கு, மாநாட்டில் கலந்து கொள்ள விடுப்பு என புதுப்புது காரணங்களில் கணக்கு, வழக்கு இல்லாமல் விடுமுறை எடுத்திருக்கிறார்.

  தற்போது இந்த ஆசிரியருக்கு 56 வயதாகிறது. இதில், 24 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், 20 ஆண்டுகள் விடுப்பிலேயே கழிந்திருக்கின்றன. வெனீஸ் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .