2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

25 ஹொலிவூட் பிரபலங்களுக்கு நிரந்தர தடை; அதிர்ச்சியில் ரசிகர்கள்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 10 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் முதல் தீவிரமாகத்  தாக்குதல் நடத்தி வருகின்றது.  இதனால் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பல்வேறு வகைகளில் பொருளாதார தடைகளை விதித்து வருகிறன.

அதே சமயம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹொலிவூட் நடிகர் பென் ஸ்டில்லர் உள்ளிட்ட 25 பிரபலங்கள் கடந்த சில நாட்களாக உக்ரேன்   ஜனாதிபதியைச்  சந்தித்து வருகின்றனர்.

 இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, குறித்த   25 பிரபலங்களும்  ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு நிரந்தர தடை விதித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ”ரஷ்ய மக்களுக்கு எதிராக அமெரிக்கா ஜனாதிபதி  ஜோ பைடன் பல வகைகளில் தடைகளை விதித்து வருகிறார். இந்நிலையில் ஹொலிவூட் நடிகர்கள் உள்ளிட்ட 25 பிரபலங்கள் உக்ரேனுக்கு  சென்று அந்நாட்டு ஜனாதிபதி செலன்ஸ்கியை  சந்தித்துள்ளனர்.

இதனால் அவர்கள் ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்கிரேனுக்கு சென்ற  பிரபலங்களை   ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ”ஆபத்தான நிலையிலும் எங்கள் நாட்டிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X