Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 12 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைனுக்கு தனது ஆதரவை காட்டும் வகையில், ரஷ்யாவைச் சேர்ந்த 11 தனிநபர்கள், 29 நிறுவனங்கள் மற்றும் 3 வங்கிகள் மீது, ஜப்பான் பொருளாதார தடை விதித்துள்ளது.
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா 2023ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இதில் அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயற்படுகின்றன. எனவே, உக்ரைனுக்கு ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை அந்த நாடுகள் வழங்குகின்றன. அதேபோல் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளும் விதிக்கப்படுகின்றன.
அதன்படி உக்ரைனுக்கு தனது ஆதரவை காட்டும் வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த 11 தனிநபர்கள், 29 நிறுவனங்கள் மற்றும் 3 வங்கிகள் மீது ஜப்பான் பொருளாதார தடை விதித்துள்ளது.
மேலும், தொழில்நுட்பம் மற்றும் எந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷிய இராணுவம் சார்ந்த 22 தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ரஷ்யாவுக்கு ஏற்றுமதி தடை உள்ள 335 பொருட்களின் பட்டியலுக்கும் ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago