2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

30 மணித்தியால சோமாலிய ஹொட்டல் முற்றுகை: ‘முடிவுக்கு கொண்டு வந்த படைகள்’

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலியத் தலைநகர் மொஹடிஷுவிலுள்ள ஹொட்டலொன்றில், முற்றுகையொன்றை அந்நாட்டுப் படைகள் முடிவுக்கு கொண்டு வந்ததாக இராணுவ அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்டடங்களை சிதைத்த வெடிபொருள்களை படைகள் இன்னும் அகற்றுவதாக குறித்த அதிகாரி கூறியுள்ளார்.

பெரும்பாலும் பொதுமக்களை உள்ளடக்கிய குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல் ஷபாப் ஆயுததாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் சுட்டபடி, வெடிபொருள்களை வெடித்து ஹொட்டலுக்குள் நுழைந்த பின்னர் 30 மணித்தியாலங்கள் படைகள் போரிட்டிருந்தன.

இத்தாக்குதலுக்கு அல் ஷபாப் குழு உரிமை கோரியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X