2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

35 பேரை கொன்ற வயோதிபருக்கு மரணதண்டனை

Freelancer   / 2025 ஜனவரி 22 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில், காரை செலுத்தி 35 பேரை கொன்ற வயோதிபருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் பென் வெய்கியு என்பவர்,(வயது 62) கடந்த நவம்பர் மாதம் ஜுஹாய் நகரில் உள்ள ஒரு மைதானம் அருகே காரில் சென்றார். 

அந்த நேரத்தில் மைதானம் அருகே ஏராளமானோர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த கார் மக்கள் கூட்டத்துக்குள் தறிகெட்டு ஓடியது. இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த விபத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் குறித்த வயோதிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இது தொடர்பான வழக்கில், அவருக்கு மரண தண்டனை விதித்து  தீர்ப்பளிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X