2025 மே 15, வியாழக்கிழமை

35 வயது வந்தால் வேலை போச்சு

Freelancer   / 2023 ஜூலை 09 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுவாக 20 பிளஸ் வயதில் வேலைக்குச் சேருகின்ற நாம் நல்லதொரு வேலை, நல்ல ஊதியம் என்ற நிலையை அடைவதற்கு 10, 12 ஆண்டுகள் ஆகிவிடும். மற்றொரு பக்கம் 30 வயதை தாண்டும்போதே இப்போதெல்லாம் வயது சார்ந்த உடல்நல பாதிப்புகள், மனக்கவலைகள் அணிவகுக்க தொடங்கி விடுகின்றன.

உதாரணத்திற்கு முடி உதிர்தல், நரைமுடி ஆகியவற்றில் தொடங்கி, உடல் பருமன், ஸ்ட்ரெஸ் போன்ற சிக்கல்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், 35 வயதிலேயே வேலை பறிபோகிவிடுமோ என்ற கவலை பெரும்பாலும் வந்துவிடாது.

ஏனென்றால் அனுபவமும், துடிப்பும் ஒருசேர இருக்கின்ற இந்த வயது ஊழியர்களை நிறுவனங்கள் கனக்கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ளும். ஆனால், சீனாவில் 35 வயதை எட்டுகின்ற ஊழியர்களுக்கு வேலை பறிபோய்விடுமோ என்ற மனக்கவலை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது.

சீனாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களை வேலையில் வைத்திருக்க விரும்புவதில்லையாம். வேலை உத்தரவாதம் இல்லாத நிலையில் திருமணம், குழந்தை, எதிர்கால திட்டமிடல் போன்றவற்றை சீனர்கள் தள்ளிவைத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .