Editorial / 2019 ஜூன் 05 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூடானியத் தலைநகர் கார்டூமிலுள்ள ஆர்ப்பாட்ட முகாமொன்றுக்குள் அந்நாட்டுப் படைகள் நேற்று முன்தினம் புகுந்ததுடன், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷிர் இவ்வாண்டு ஏப்ரலில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட மோசமான வன்முறையாக, 35க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக எதிரணியுடன் இணைந்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், நேற்று முன்தினம் சமூக வலைத்தளத்தில் பகரப்பட்ட காணொளியில் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் காற்றில் கேட்கின்றபோது வீதிகளில் மக்கள் ஓடியிருந்த நிலையில், நேற்று (04) அதிகாலை வரை சில புறநகர்களில் ஆங்காங்கேயான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்கக்கூடியதாக இருந்ததாக சம்பவத்தைக் கண்ணுற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கார்டூமும் அதன் இரட்டை நகரமான ஒம்டுர்மானின் வீதிகளில் நடைபாதையோரங்களிலிருந்து புடுகங்கப்பட்ட தடைகள், உலோகங்கள், மின் கம்பங்கள் மூலம் நைல் வீதி முழுவதும் தடுப்பு வேலிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைத்துள்ளதாக சம்பவத்தைக் கண்ணுற்றவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கடந்தாண்டு டிசெம்பரில் ஆரம்பிக்கப்பட்டபோது மய்யமாக இருந்த பாதுகாப்பமைச்சுக்கு அடுத்ததான ஆர்ப்பாட்ட இருப்பு அகற்றப்பட்டுள்ளதாகவும் இதைக் கண்ணுற்றவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்தை மக்கள் நெருங்குவதைத் தடுக்கும் முயற்சியாக, மத்திய கார்டூமில் கலகமடக்கும் பொலிஸார், துணைப்படை விரைவு உதவிப் படை உறுப்பினர்களை உள்ளடக்கிய பொல்லுகளைக் கொண்ட படைகள் மத்திய கார்டூமில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், வீதிகளை மூடியுள்ளதாகவும் இதைக் கண்ணுற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரதான எதிரணிக் கூட்டணியுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் இரத்துச் செய்வதாக நேற்றுக் கூறியுள்ள ஆளும் இராணுவச் சபை, ஒன்பது மாதங்களுக்குள் தேர்தல்களைக் கோரியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .