2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

4 ஆயிரம் அடி ஆழ குகையில் சிக்கிய வீரர்

Freelancer   / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் உள்ள குகைகளுக்கு சென்று ஆராய்வதில் ஆர்வம் கொண்டவர் மார்க் டிக்கி (வயது 40). இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். தென்துருக்கியின் டாரஸ் மலைத்தொடர் பகுதியில் 4 ஆயிரம் அடி ஆழம் கொண்ட மோர்கா குகையை ஆய்வு செய்யவதற்காக இயற்கை நல ஆர்வலர்கள் சிலரடன் குகையை சுற்றிப்பார்க்க இறங்கினர்.

இந்தநிலையில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது திடீரென டிக்கிக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனால் குகையில் இருந்து வெளியேற முடியாமல் சிரமப்பட்டார். இதுகுறித்து அவருடன் சென்ற குழுவினர் பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இத்தாலி, ஹங்கேரி, பல்கேரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மீட்புப்பணி நிபுணர்கள், டிக்கியை மீட்க துருக்கி விரைந்தனர். இந்த மீட்புப்பணியின்போது இரவு, பகல் பாராமல் பல்வேறு நாட்டை சேர்ந்த டாக்டர்களும் அந்த குகைக்குள் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் 10 நாட்களுக்கு பிறகு மார்க் டிக்கி குகையில் இருந்து உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X