2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

40 வருடங்களுக்குப் பின்னர் அனுமதிக்கப்படும் பெண்கள்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஈரானில் 40 வருடங்களுக்குப் பின் உள்ளூர் காற்பந்து போட்டிகளை மைதானத்தில் பார்வையிட பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 அந்நாட்டில் 1979 ஆம்ஆண்டு இடம்பெற்ற இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் பெண்கள் விளையாட்டு மைதானத்திற்குச் சென்று போட்டிகளைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த  வியாழக்கிழமை  முதன் முறையாக,   பெண்களுக்கு மைதானத்தில்  உள்ளூர் காற்பந்து போட்டிகளைப்  பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்  500 காற்பந்து ரசிகைகள் தனியான நுழைவு வாயில் வழியாக போட்டிகளைப் பார்வையிட  அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சமீபத்தில் டெஹ்ரானில் ஒரு பெண் ரசிகை காற்பந்து போட்டியைப் பார்க்க அனுமதி கேட்டு தன்னைத்தானே தீயிட்டுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X