Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியன்மாரின் முன்னாள் அரசுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு 5 வழக்குகளில் இராணுவ ஆட்சியாளர்களால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், அவர் முற்றிலுமாக விடுவிக்கப்படவில்லை எனவும், அவர் மேலும் 14 வழக்குகளை எதிர்கொண்டுள்ளார் எனவும் மியன்மார் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
78 வதான ஆங் சான் சூகி,1991 ஆம் ஆண்டில் சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்றவர். 2021 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சியையடுத்து, ஆங் சான் சூகி உட்பட ஜனநாயக அரசியல் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.
பல்வேறு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மொத்தமாக 33 வருட சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊழல், சட்டவிரோதமாக வோக்கி டோக்கிகளை வைத்திருந்தமை, கொரோனா கட்டுப்பாடுகளைப் புறக்கணித்தமை முதலானவை தொடரபான குற்றச்சாட்டுகளும் இவற்றில் அடங்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025