2025 நவம்பர் 05, புதன்கிழமை

‘50க்கும் மேற்பட்டோர் தாக்குதலில் கடத்தப்பட்டனர்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேற்கு நைஜீரியாவிலுள்ள கஸ்டினாவின் வுர்மா கிராமத்தின் மீதான தாக்குதலொன்றில் சிறுவர்கள், கர்ப்பிணிகள் உள்ளடங்கலாக 50க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டதாக அங்குள்ள ஏழு பேர் இன்று தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் குறித்த கிராமம் மீதான தாக்குதல் ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், 15 பேரே கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், மேலும் பலர் கடத்தப்பட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

அனைத்துப் பகுதிகளிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட கொள்ளைக்காரர்கள் சுட்டதாகவும், மூன்று மணித்தியாலமளவில் அவர்கள் இயங்கியதாகவும் எவரும் அவர்களுக்கு எதிர்ப்பைக் காட்டவில்லை என அங்குள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் உள்ளடங்கலாக ஆகக்குறைந்தது 53 பேர் கடத்தப்பட்டதாக அங்குள்ள ஏழு பேரும், கடத்தப்பட்டு தாக்குதலாளிகளால் விடுவிக்கப்பட்ட ஒருவரும் கூறியுள்ளனர்.

அந்தவகையில், கடத்தியவர்களிடமிருந்து ஏற்கெனவே சிலர் பணயத் தொகை கோரிக்கைகளை சிலர் பெற்றுள்ளதாக தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X