2024 மே 09, வியாழக்கிழமை

56 சிரேஷ்ட வைத்தியர்கள் இராஜினாமா

Freelancer   / 2022 ஜனவரி 02 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் புகழ்பெற்ற வைத்தியசாலைகளில் இருந்து சிரேஷ்ட வைத்தியர்கள் 56 பேர் தங்களது வேலையை இராஜினாமா செய்துள்ளனர்

கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் 2015 ஆம் ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மருத்துவ மற்றும் கற்பித்தல் நிறுவனங்கள் சட்டத்தின் காரணமாக, அவர்கள் முக்கிய பங்கு வகிக்கும் விடயங்களில் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்ததாக தெரிவிக்கின்றனர்.

இந்தச் சட்டத்தின் கீழ், புதிய ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சுகாதாரக் கொள்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. மாகாண அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பல மூத்த வைத்தியர்களை புகழ்பெற்ற வைத்தியசாலைகளில் இருந்து தங்கள் வேலையை இராஜினாமா செய்ய வழிவகுத்தது.

அனுபவம் இல்லாத புதிதாக பணியில் சேர்ந்த வைத்தியர்களுக்கு சிரேஷ்ட நிபுணர்கள் மீது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இது, வைத்தியசாலைகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுடன்,  சிரேஷ்ட சுகாதார நிபுணர்கள் மத்தியில் அதிருப்தியை அதிகப்படுத்தியுள்ளது. 

சிரேஷ்ட வைத்தியர்கள் தங்களது தனியார் கிளினிக்குகளை மூடுவதை விட அரச வேலைகளில் இருந்து இராஜினாமா செய்வதை விரும்புவதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 56 சிரேஷ்ட வைத்தியர்கள் லேடி ரீடிங் வைத்தியசாலையை மட்டும் விட்டுச் சென்றுள்ளனர். 

மாகாணத்தில் உள்ள மற்ற வைத்தியசாலைகளில் இருந்தும் இதேபோன்ற சிரேஷ்ட வைத்தியர்களின் வெளியேற்றம் நடந்துள்ளது என்று தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச வைத்தியசாலைகளில் சிரேஷ்ட வைத்தியர்கள் வெளியேறுவதால் நோயாளிகள் குறிப்பாக ஏழைகள் கடும் சிரமப்படுகின்றனர். இப்போது, ​​இந்த நோயாளிகள் குறைந்த அனுபவமுள்ள மருத்துவ பட்டதாரிகளை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. 

அதிக கட்டணம் செலுத்திய பின்னர் அவர்கள் தனியார் கிளினிக்குகளில் நிபுணர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும். லேடி ரீடிங் வைத்தியசாலையிலுள்ள இருதயவியல் துறையை மூடுவதுதான் வருந்தத்தக்க நிலையின் மிக முக்கியமான விளைவு என்று குறிப்பிடப்படுகிறது.

பாகிஸ்தானில் சுகாதாரத் துறையில் நிலைமைகள் மோசமாக இருந்து மிக மோசமாகி வருகின்றன. 

வைத்தியர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபடுவது வழக்கம். சுகாதார நிபுணர்கள் மத்தியில் அதிகரித்துவரும் அதிருப்தி, வெளிநாட்டில் சிறந்த வாழ்க்கைக்காக நாட்டை விட்டு வெளியேற பலரை கட்டாயப்படுத்தியுள்ளது.

பல வைத்தியர்கள் வெளியேறிவிட்டதாகவும், பலர் அவ்வாறு செய்ய பரிசீலித்து வருவதாகவும் எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டது. 

சமீபத்திய ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X