Editorial / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் எஞ்சியிருக்கும் ரோகிஞ்சாக்கள் மோசமான ஒரு இனவழிப்பு பாதிப்பு ஒன்றை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்கள், இராணுவத்தால் மியான்மாரிலிருந்து ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட மில்லியன் கணக்கானோர் நாடு திரும்புவது இயலாதது என எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, நேற்று வெளியிடப்பட்ட கடுமையாக சாடப்பட்ட அறிக்கையில், மியான்மாரின் இராணுவத் தளபதி மின் ஆங் ஹலையங் உள்ளிட்ட முன்ணணி இராணுவ ஜெனரல்களை ரோக்கிஞ்சா ஒடுக்கல் நடவடிக்கையின்போது கொலைகள், கூட்டு வன்புணர்வு, தீ தாக்குதல் விசாரணைகளை எதிர்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகளின் உண்மையைக் கண்டறியும் நடவடிக்கொன்று அழைப்பு விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையால் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்படுத்தப்பட்ட குறித்த நடவடிக்கையானது, ரோக்கிஞ்சாக்கள் மீதான 2017ஆம் ஆண்டு நடவடிக்கையை இனவழிப்பொன்றாக பட்டியலிட்டிருந்தது.
ராக்கைன் மாநிலத்திலுள்ள 600,000 ரோக்கிஞ்சாக்கள் வருந்ததக்க நிலைமைகளின் வாழ்வதாகவும், அவர்களின் வாழ்க்கையை தொடும் ஒவ்வொரு விடயத்தையும் தொடும் நகர்வுக்கு கட்டுப்பாடுகள் காணப்படுவதாக மேற்குறிப்பிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
இதுதவிர, மியான்மார் இராணுவம், ஏனைய அரசாங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், வன்புணர்வுகள், கூட்டு வன்புணர்வுகள், சித்திரவதை, வலிந்து காணாமால் ஆக்கச் செய்தல், ஏனைய பாரிய மனித உரிமைகள் மீறல்களுக்கான விடயங்கள் தற்போதும் இருப்பதாக குறித்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.
இனவழிப்பு எண்ணத்தை மியான்மார் கொண்டிருப்பதாகவும், ரோகிஞ்சாக்கள் தற்போதும் மோசமான இனவழிப்பு பாதிப்பின் கீழ் உள்ளதாக குறித்த அறிக்கையில் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களின் கடந்தாண்டு கண்டுபிடிப்புகளை மீண்டும் மீண்டும் மறுக்கின்ற மியான்மார், புதிய அறிக்கைக்கு இன்னும் பதிலளிக்கவில்லை.
அரசாங்கப் படைகள், ஏனைய குழுக்களால் 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில் ஏறத்தாழ 740,000 ரோகிஞ்சாக்கள் ராக்கைனிலிருந்து வெளியேறி பங்களாதேஷுக்கு சென்றிருந்தனர்.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago