2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

7,000 பேருக்கு சிக்குன்குனியா; அமெரிக்கா எச்சரிக்கை

S.Renuka   / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் சமீப காலமாக சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தெற்கு குவாங்டாங் மாகாணத்தின் போஷான் உள்ளிட்ட 12 நகரங்களில் இந்த தொற்று வேகமெடுத்துள்ளது.

இதனால் கடந்த ஒரு மாதத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்குன்குனியா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சீன பயணத்தை தவிர்க்குமாறு தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து கொரோனா தொற்று காலத்தில் எடுக்கப்பட்டதுபோல, விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி சிக்குன் குனியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த பிறகே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மேலும் காய்ச்சல், உடல் வலி போன்ற லேசான அறிகுறிகள் இருந்தாலே அருகில் உள்ள  அணுகி சோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிக்குன்குனியா தொற்று பரவுவதற்கு முக்கிய காரணம் கொசுக்களே. தேங்கும் தண்ணீரில்தான் அவை அதிகளவில் உற்பத்தியாகின்றன.

எனவே, பூந்தொட்டிகள், டயர்கள் போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களை அப்புறப்படுத்த வேண்டும். மீறினால் சுமார் ரூ.1 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X