2025 மே 15, வியாழக்கிழமை

7 நாட்கள் அழுது கின்னஸ் முயற்சி

Freelancer   / 2023 ஜூலை 23 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவில் ஒரு நபர் கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக ஏழு நாட்கள் தொடர்ந்து இடைவிடாமல் அழுதுள்ளார். இதில் அதிர்ச்சி என்னவென்றால் ஒரு வாரம் முழுவதும் கண்ணீர் சிந்தும் உலக சாதனை முயற்சியில் இடைவிடாமல் அழ முயன்ற Tembu Ebere என்ற அந்த நபர் தற்காலிகமாக சில நிமிடங்கள் பார்வையை இழந்தார்.

மேலும் இந்த விபரீத முயற்சியைத் தொடர்ந்து, அவர் கடும் தலைவலி, முகம் மற்றும் கண்கள் வீக்கம் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார்.

சாதனை முயற்சியில் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றி கூறிய Tembu Ebere, தொடர்ந்து அழுதது தன்னை சுமார் 45 நிமிடங்களுக்கு பகுதியளவு பார்வையற்றவராக மாற்றியதாக தெரிவித்தார்.

எனது சாதனை முயற்சியை கைவிட தயாராக இல்லாத காரணத்தால், இலக்கை அடைய வியூகம் வகுத்து, என் அழுகையை குறைக்க வேண்டியிருந்தது என்று கூறினார். சிரமங்களை எதிர்கொண்ட போதிலும் தனது இலக்கை நோக்கி செல்வதில் உறுதியாக இருந்ததாகவும் கூறினார்.

இதில் கொடுமை என்னவென்றால் Guinness World Records அமைப்பு இவரது இந்த முயற்சியை கணக்கில் எடுத்து கொள்ளாது என்பது தான். ஏனென்றால் இந்த நைஜீரிய மனிதர் கின்னஸ் உலக சாதனைக்காக அதிகாரப்பூர்வ பதிவுச்​செய்தல் மற்றும் விண்ணப்பித்தல் உள்ளிட்ட எதையும் பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .